நாலக எதிரிசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்
ஈ.டி.ஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் நாலக எதிரிசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.
இதேவேளை ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் நேற்று மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி இன்று நாலக எதிரிசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார். 13.7 மில்லியன் ரூபாய் வைப்பு பணத்தை சட்டவிரோதமாக ஏற்றுக்கொண்டமை, முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈ.டி.ஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தமையை யடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றனமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam