நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கிரியைகள் இன்று(17.01.2024)அதிகாலை 5.00 மணிக்கு பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
மஹா கும்பாபிஷேகம்
ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்த மோத்தம த்ரயத்திரும்சமத் குண்டபக்ச மஹாயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம், எதிர்வரும் 24 ஆம் திகதி நிகழவுள்ளது.
இந்நிலையில் , 21 ஆம் திகதி நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கு உரிய தூபதீபம், யந்திர ஸ்தாபனங்கள், பரிவார மூர்த்திகள், பிரம்ஸ்தாபனம், அர்த்தபந்தண சாத்தல் இடம்பெற்று, மறுநாள் 22 ஆம் திகதி காலை 07.00 மணிக்கு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வும் 23ஆம் திகதி மாலை 05.00 மணி வரை இடம்பெற்று இனிதே நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயத் திரும்சமத் குண்டபக்ச மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேச கிரியைகளை நடாத்துவதற்காக 27 சிவாச்சாரியர்கள் கலந்து கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
