நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பூந்தண்டிகைத் திருவிழா (Photos)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினொறாவது திருவிழாவாகிய பூந்தண்டிகைத் திருவிழா நேற்றிரவு (29.06. 2023) இடம்பெற்றுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் (19.06.2023) அன்று ஆரம்பமானது.
இந்த திருவிழா தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த பெருவிழா
அதன்படி, ஜுலை 01ஆம் திகதியன்று சப்பறத் திருவிழாவும், ஜுலை 02ஆம் திகதியன்று தேர்த்திருவிழாவும், ஜுலை 03ஆம் திகதியன்று தீர்த்தோற்சவமும், ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவமும் இடம்பெறவுள்ளது.
மேலும், இந்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவில் நயினாதீவு நாகபூசணி அம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட தெய்வங்கள் பூந்தண்டிகை தொட்டியில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளனர் .
இதில் பல பாகங்களில் வருகைதந்து பக்தர்களின் பக்தி பூர்வமாக அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 9 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
