நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலையின் நினைவேந்தல் (Video)
நாகர்கோவில் விமானப் படையினரின் குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்களின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் நேற்றைய தினம் அதன் ஏற்பாட்டுக்குழு தலைவர் சிவாயநம தலமையில் இடம்பெற்றது.
1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் 21 மாணவர்கள் பலியாகினர்.
பாடசாலை நினைவுத் தூபி

அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த சுந்தரலிங்கம் என்பவரால் பொது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், உறவுகள் சுடர் ஏற்றியதுடன் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் 21 மாணவர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு படுகொலைக்கு உள்ளான மாணவர்களது பெற்றோர்கள், உறவுகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நினைவுரை

இதில் நினைவுரைகளை குறித்த படுகொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் பாடசாலை முதல்வராக இருந்த மகேந்திரன், மற்றும் தற்போதைய அதிபர் கண்ணதாசன் ஆகியோர் நினவுரை ஆற்றினர்.
இந் நினைவேந்தலில் பாடசாலை அதிபர், சில ஆசிரியர்கள், மற்றும் கொல்லப்பட்ட
மாணவர்களின் உறவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.













கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri