ஈஸ்டர் குண்டு தாக்குதலில் இராணுவ புலனாய்வு பிரிவு செய்த சதி : பயங்கர தகவல்கள் அம்பலம்
ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்படவிருந்த காலப்பகுதியில் சஹ்ரான் இந்தியாவுக்கு சென்று விட்டதாக இராணுவ புலனாய்வு பிரிவு அறிவித்ததாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் தெரிவித்துள்ளார்.
இதனை கொழும்பில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய மாநாட்டில் உரையாற்றும் போதே ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது
முதல் விசாரணைக் குழுவின் தகவல்கள்
ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடந்து 24 மணிநேரத்திற்குள் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவில் இந்த காரணங்கள் தெரியவந்துள்ளது.
அந்த குழுவின் உறுப்பினரான பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் நாடாளுமன்ற தேர்வுக் குழு விசாரணையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள், ஏப்ரல் 4 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவால் இலங்கைக்கு தகவல் ஒன்று வழங்கப்பட்டது.
மேலும் 2019 ஏப்ரல் 5 ஆம் திகதி எழுத்து மூலம் அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் ஏப்ரல் 8-9 ஆம் திகதிகளில் நடந்த புலனாய்வு தகவல்கள் ஆய்வு கூட்டத்தில் இது தொடர்பில் பேசப்படவில்லை.
இராணுவ புலனாய்வு பிரிவு தெரிவித்த கருத்து
ஏனென்றால் இராணுவ புலனாய்வு பிரிவு சஹ்ரான் இந்தியாவில் இருப்பதாக அரச புலனாய்வு பிரிவுக்கு அறிவித்துள்ளது.
அதனால் குறித்த கூட்டத்தில் தாக்குதல் தொடர்பில் பேசவில்லை என இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகள் இது வரை வெளியிடப்படவில்லை.

மேலும் அதன் சில சாட்சியங்கள் சட்டச் சிக்கல் என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சஹ்ரான் அக்காலப்பகுதியில் குண்டுகள் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெடிக்க வைப்பதற்கான இடங்களை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் எவ்வாறு இராணுப் புலனாய்வு பிரிவு சஹ்ரான் இந்தியாவுக்கு சென்று விட்டார் என ஏன் தெரிவித்தது.
இந்த தாக்குதலில் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தொடர்பிருப்பதற்கான காரணங்கள் முதல் விசாரணை அறிக்கையில் தெரிவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.