அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஸ்பெயினிலிருந்து இலங்கை வந்த மர்ம பொதிகள்
சர்வதேச விரைவு அஞ்சல் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வந்த குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்களின் ஒரு தொகுதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பிரிவில் பணிபுரியும் சுங்க அதிகாரிகளால் இந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை 15 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.
நீர்கொழும்பு, கந்தானை, கதிர்காமம், கணேமுல்ல, மாலபே மற்றும் கொழும்பு பகுதிகளில் உள்ள பல முகவரிகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஸ்பெயினிலிருந்து 14 சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சுங்க அதிகாரிகள்
பொதிகளை ஸ்கேனர்கள் மூலம் சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அவற்றில் 12 பொதிகளில் போதைப்பொருள் இருப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் 12 கிலோ 677 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹஷிஷ் ஆகியவை அடங்கும்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் கடைசித் தலைவராக போப் பிரான்சிஸ்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் தீர்க்கதரிசனம் News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
