ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநரை அறைந்த மர்ம நபர்! வைரலாகும் காணொளி
ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் திடீரென அறைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் (Abidin Koram) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருக்கையில்,மர்மநபர் ஒருவர் மேடையில் ஏறி திடீரென கண்ணத்தில் அறைந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டதில், அந்த நபரின் பெயர் அயுப் அலிசாதே (Ayub Alizadeh) என்பது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்ற
போதும், தன் மனைவிக்கு ஆண் மருத்துவர் சிகிச்சை அளித்ததற்காக அவர் கோபத்தில்
இருந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam