பொலிஸார் என தெரிவித்து மணல் ஏற்றிச் சென்ற மர்ம நபர்கள்
கிளிநொச்சி - முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டரீதியற்ற முறையில் குவிக்கப்பட்டிருந்த முப்பது கியூப் மணலில் ஏறத்தாள 20கியூப் மணல் சிவிலுடையில் வந்த சிலர் பொலிசார் எனத் தெரிவித்து டிப்பர் வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பொலிசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது மணல் ஏற்றிய 03 டிப்பர் வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதனை விட 09 டிப்பர் வாகனங்களில் ஏற்றக் கூடிய வகையில் சட்டரீதியற்ற முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வீதியோரங்களில் குவிக்கப்பட்டிருந்த சுமார் 29 கியூப் வரையான மணல் சிவில் உடையில் பொலிசார் வந்த மூவர் பொலிஸ் நிலையத்துக்கு ஏற்றிச் செல்வதாக தெரிவித்து டிப்பர் வாகனங்களில் மணலை ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதில் குறிப்பிட்ட லோட் மணல் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படாது
கானாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது



