நாட்டின் வடக்கு கிழக்கு கடற்கரைகளில் கரையொதுங்கிய மர்ம பொருட்கள்
வேம்படி உடுத்துறை
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியில் மிதவை ஒன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை, அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள், மிதவைகள், போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - எரிமலை
களுதாவளைக் கடற்கரை
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த கடற்கரைக்கு இன்றயதினம்(17.01.2025) அதிகாலை சென்ற கடற்றொழிலாளர்கள், தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளதாகவும், பின்னர் அதனைக் கரைசேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இளம் நீல நிறத்தில் இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாக உள்ள இந்தப் பொருள், பெரிய அளவில் காணப்படுகின்றது. அதன் அடியில் 12 L M எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றன.
கடற்றொழிலாளர்கள் அனுமானம்
இதன் மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு, டயர்களும் காணப்படுகின்றன. இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |