கொங்கோ குடியரசில் பரவும் மர்ம தொற்று : 70 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
கொங்கோ (Congo) ஜனநாயகக் குடியரசில் பரவி வருகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொது சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, அடையாளம் காணப்படாத இந்த நோயால் 79 பேர் உயிரிழந்துள்ளதுடன், 376 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள்
எனினும், இந்த நோய் இன்னும் அறியப்படாத தோற்றத்தில் உள்ளதாகவும் தென்மேற்கு கொங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்திலே கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமெனவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
