முல்லைத்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
முல்லைத்தீவு - முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் மரக்காலை ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தை சேர்ந்த இராமையா மகாதேவன் (வயது-54) எனும் குறித்த காவலாளி மரக்காலை ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை உயிரிழந்த நிலையில் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரக்காலையில் உள்ள சி சி ரி வி காணொளி மூலம் குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக உடலம் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது உயிரிழப்பு தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

