கிளிநொச்சியில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி - பரந்தன் a-9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் இன்றிரவு குற்றுயிராக கிடந்த ஒருவரை அவதானித்த கடை உரிமையாளர் ஒருவர் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை எடுத்து குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் தீவிர விசாரணை
உயிரிழந்தவர் உடலில் போத்தலினால் குத்தப்பட்டு அதிகளவு இரத்தபெருக்கெடுத்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன், இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam