அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பறந்த உளவு பலூன் - பரபரப்பு சம்பவம்
கனடாவில், வானில் மர்ம பலூன் ஒன்று பறப்பதை உளவு பார்க்கும் பலூனை கனடா மற்றும் அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு அமைப்பொன்று கவனித்து வருவதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வானில் உயரத்தில் பறக்கும் மர்ம பலூன் ஒன்றைத் தாங்கள் கண்டுள்ளதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உளவு பார்க்கும் பலூன்
ஏற்கனவே சீன உளவு பார்க்கும் பலூன் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது கனடாவும் அவ்வாறான பலூனைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பலூனை கனடா மற்றும் அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு அமைப்பான NORAD கண்காணித்து வருவதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கனடா மக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும், கனடா வான்வெளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.