விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பக்டீரியா!
சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் மர்மமான பக்டீரியா இனத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இந்த பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது விண்வெளியில் வளர்ந்துள்ள முதன்மையான உயிரி வகையாக இந்த புதிய கண்டுபிடிப்பு அறிவிக்கப்படுகிறது.
நியாலியா தியாங்கோங்கென்சிஸ்
இதற்கு ‘நியாலியா தியாங்கோங்கென்சிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2023 ஜூன் மாதம் பூமிக்கு திரும்பிய Shenzhou 15 பயணத்தின் போது, விண்வெளி நிலையத்தின் மேற்பரப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இந்த பக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது.
இது தற்போது International Journal of Systematic and Evolutionary Microbiology என்ற பன்னாட்டு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பக்டீரியா வளர காற்று தேவைப்படும், spore உருவாக்கும், தண்டு வடிவம் கொண்டது.
விண்வெளி உயிரியல் வளர்ச்சி
பூமியில் காணப்படும் Niallia circulans இனத்தின் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அதிலிருந்து சற்றே வேறுபடுகிறது.
விண்வெளி உயிரியல் வளர்ச்சிக்கான சான்றுகள் இந்த புதிய இனத்தில் இரண்டு முக்கியமான புரதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், பயோஃபில்ம் உருவாக்கம், ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ் எதிர்ப்பு மற்றும் விகிரண சேதத்தை சரிசெய்தல் போன்ற முக்கிய செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
இது விண்வெளியில் உயிரிகள் எவ்வாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன என்பதற்கான புதிய தகவல்களை அளிக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
