மியன்மாரில் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாகப் பொதுத்தேர்தல்
மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, இன்று(28.12.2025) முதல் முறையாகப் பொதுத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலை ஒரு 'போலித் தேர்தல்' என சர்வதேச சமூகமும், மியன்மாரின் ஜனநாயக ஆதரவு அமைப்புகளும் கடுமையாகச் சாடியுள்ளன.
மியன்மாரின் 330 தொகுதிகளில் 274 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல்
நாட்டின் 20% பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
இதனிடையே மியன்மாரின் முக்கியத் தலைவரான ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கட்சியான 'தேசிய ஜனநாயக லீக்' (NLD) கலைக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் இராணுவத்தின் ஆதரவு பெற்ற 'யூனியன் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி' (USDP) பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று காலை ஒரு சில இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மாண்டலே (Mandalay) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு வீடு சேதமடைந்ததுடன், மூன்று பேர் காயமடைந்தனர்.
இராணுவ அரசாங்கம்
மேலும், தேர்தலை விமர்சிப்பவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கக்கூடிய புதிய சட்டத்தை இராணுவ அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதுவரை 200இற்கும் மேற்பட்டோர் தேர்தல் தொடர்பான விதிமீறல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் இந்தத் தேர்தலை ஒரு ஏமாற்று வேலை என்று கூறியுள்ளன.
"மக்களைக் கட்டாயப்படுத்தி வாக்களிக்க வைப்பதன் மூலம் இராணுவ ஆட்சிக்கு அங்கீகாரம் தேட முயல்கிறது மியன்மார் ஜூண்டா (Junta)" என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
தேர்தல் முடிவுகள் எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.2.35 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க கிரீடம்: புகைப்படம் எடுக்க முயன்று தட்டிவிட்ட சிறுவன்: வீடியோ News Lankasri