மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்..! வெளியான நடுங்க வைக்கும் காணொளிகள்
மியன்மார் (Myanmar) மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போதான பாதிப்புக்கள் பதிவாகிய காணொளிகளை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
நேற்று (28) ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மியன்மாரில் மிக பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பின்விளைவுகள் அடங்கிய கணக்கான காணொளிகள் மற்றும் படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.
பலர் பலி..
அந்த வகையில், இந்த நிலநடுக்கத்தின் போதான மிக மோசமான சேதங்களை உள்ளடக்கிய காணொளி ஒன்றை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
LATEST: Massive quake rocks Myanmar 🇲🇲
— Los Angeles Magazine (@LAmag) March 28, 2025
• Magnitude 7.7 at lunchtime
• 144+ dead, 732 injured
• Mandalay & Pyinmanar worst hit
• Ava Bridge collapsed
Pleas for global aid 📢 pic.twitter.com/gd9Lpdwa3J
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 150இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரின் மெண்டலே பகுதியில் 7.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்போது, வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தின் தொலைதூரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
More destruction scenes from Myanmar and Bangkok regs the earthquake. pic.twitter.com/zoZxii6gEd
— Crabbit Basturt🏴🇬🇧 (@gordon983913058) March 28, 2025
அதேவேளை, தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் நேற்று (28) 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அத்தோடு, தாய்லாந்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் பாதிக்கப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |