மைத்திரியும் இந்தியா விஜயம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் வாரத்தில் மைத்திரிபால சிறிசேன இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பின் அடிப்படையில் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்து இந்திய தலைவர்களுடன் மைத்திரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளை அழைக்கும் இந்தியா
இந்திய விஜயத்தின் பின்னர் மைத்திரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்வார் என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் அமெரிக்க வாழ் இலங்கையர்களை சந்தித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்புக்களுக்கு இந்திய அரசாங்கம் தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அதிகாரபூர்வ அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
