எனது வார்த்தை பிரயோகம் தவறானது – ஜீவன் தொண்டமான்
தமது வார்த்தை பிரயோகம் தவறானது என ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் தொடர்பில் அண்மையில் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் பொதுவெளியில் பயன்படுத்தத் தகாத வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தி அமைச்சர் ஜீவன் வெளியிட்ட விமர்சனங்கள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் ,குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமைச்சர் ஜீவன் முகநூலில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு குறித்த போராட்டம் தனது தந்தையின் கனவு எனவும், இதனால் உணர்ச்சி மிகுதியில் தாம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானது என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறுவதனை தவிர்க்கும் வகையில் தாம் செயற்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam