தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி - அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்
தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈழ விடுதலை போராடடத்தின் ஆரம்ப கார்தாவான முத்து குமார சுவாமி அமெரிக்காவில் மரணமடைத்துள்ளார். அவரது நினைவாக எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவருமான சட்டத்தரணி தம்பித்துரை முத்துகுமாரசுவாமி கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் காலமானார்.
விடுதலைப் போராட்டம்
திருநெல்வேலியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி தம்பித்துரையின் மகனான இவர் பதின்ம வயதிலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். நீண்ட காலம் சிறை வாசமும் அனுபவித்தார்.

பதின்ம வயதில் விடுதலைப் போராட்ட செயற்பாட்டில் பங்கேற்று இறக்கும் வரை அதற்காக கடுமையாக உழைத்தார். அமெரிக்காவில் நாடு கடந்த தமிமீழ அரசின் ஆலோசகராகவும் கடமையாற்றிய இவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்தார்.
தமிழ்த் தேசிய அரசியலின் நியாயப்பாடுகளை, துயரங்களை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கும் சொல்வதில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது.
குமார் என பெரியவர்களினாலும் நண்பர்களினாலும் அழைக்கப்படுகின்ற முத்துக்குமாரசுவாமி தலைமைத்துவ ஆற்றலிலும் ஆங்கிலப் புலமையிலும் கைதேர்ந்தவராக இருந்தார். இறக்கும் வரை இக்கட்டுரையாளருடன் தொடர்பில் இருந்த குமாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.