முத்துராஜா சென்ற விமானத்தின் மீது கவனம் செலுத்திய உலக மக்கள்
முத்துராஜா யானை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து சென்ற விமானம் உலகின் கவனத்தை ஈர்த்தது.
யானையை அழைத்து சென்ற குறித்த ரஷ்ய விமானம் அன்றைய நாளில் அதிக பேரால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துராஜா பயணித்த விமானம் நேற்று (02.07.2023) காலை 7.30 மணியளவில் தாய்லாந்து நோக்கி புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
பெருந்திரளான மக்கள்
முத்துராஜாவை நேசிக்கும் பெருந்திரளான மக்கள் தெகிவளை மிருகக்காட்சிசாலைக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் வருகை தந்து இந்நிகழ்வை பார்வையிட்டனர்.
2001 ஆம் ஆண்டு, தாய்லாந்து அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட முத்துராஜா அளுத்கம விகாரை பொறுப்பில் இருந்த இருந்தபோது சித்திரவதைக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு மற்றும் அவசியமான சிகிச்சை வழங்குவதற்காக தாய்லாந்து அரசாங்கம் அதனை மீள பெற்றுக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
