ஐ.பி.சி தமிழின் அனுசரணையில் முத்தமிழ் விழா (Photo)
யாழ். மாநகர சபை முதல் முறையாக ஏற்பாடு செய்த முத்தமிழ் விழா, ஐ.பி.சி தமிழின் அனுசரணையில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் வெகுவிமர்சையாக நேற்று (16) இடம்பெற்றது.
இயல்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழா நிகழ்ச்சிகளில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் ஆகியவற்றுடன் விருந்தினர்கள் யாழ். மாநகர சபை முன்றலில் இருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது கவிஞர்.சோ.பத்மநாதனுக்கு யாழ். மாநகர சபையால் இயல்துறைக்கான அரச கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த அமர்வில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் வழக்காடு மன்றம் விசேட அம்சமாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், ஐ.பி.சி தமிழின் குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன், வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.





500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam