முஸ்லிம் மக்களின் வயல் நிலங்கள் பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிப்பு: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள் பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பௌத்த பிக்கு தரப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை அமைப்பாளர் ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றது. விகாரைகள் என்ற பெயரில் தமிழ் - முஸ்லிம் மக்களின் வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில் குடியிருப்புக்களுக்கு மத்தியில் விகாரைகள் அமைக்கப்படுகின்றது.
அதே நேரம் எல்லை கிராமங்களில் வயல் நிலங்கள் குடியேற்றங்கள் என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றது. புல்மோட்டை பகுதியிலும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வயல்நிலங்கள் பௌத்த பிக்குகளினால் "பூஜா பூமி" என்ற பெயரில் ஆக்கிரமிக்கபட்டுள்ளது.
அங்கு முஸ்லிம் விவசாயிகள் மற்றும் பெண்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
திருகோணமலை மாவட்டத்தில் திட்டமிட்டு இனக்கலவரத்தை தூண்டும் வகையில் இனவாத செயற்பாடுகள் அதிகரித்தவன்னம் உள்ளது. அரச இயந்திரமும் பாதுகாப்பு தரப்பினரும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருப்பது தமிழ், முஸ்லிம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புல்மோட்டையில் ஆக்கிரமிக்கபடும் விவசாய நிலங்கள் மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும். திட்டமிட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் இனக்குரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
