முஸ்லிம்கள் பொதுச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய ஏற்பாடு!
முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளுக்கான நடைமுறைகளை, இலங்கை பொதுமக்களின் திருமணம் மற்றும் விவாகரத்து ஆகியவற்றுக்கான பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளது.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவை நீதி அமைச்சர் தாக்கல் செய்தார்.
அரசியலமைப்பின் 12வது பிரிவின்படி, எந்தவொரு குடிமகனுக்கும் இனம், மதம், மொழி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் அல்லது அத்தகைய காரணங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டும் குறிப்பிட்ட விதிகள் உள்ளன,
எனவே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள் அமைப்புகளும், முஸ்லிம் சட்ட அறிஞர்களும் இத்தகைய விதிகளை சட்டத்திலிருந்து ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியிருந்தனர் .
இதனையடுத்தே இலங்கை குடிமக்களின் திருமணம் மற்றும் விவாகரத்தை நிர்வகிக்கும் பொதுவான சட்டத்தின் கீழ், முஸ்லிம் சமூகத்தின் திருமணம் மற்றும் விவாகரத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.