நான் அதை நிறுத்தினால் மொத்த உக்ரைனும் முடங்கும்! எலான் மஸ்க் மிரட்டல்
எனது ஸ்டார்லிங்க் அமைப்பு உக்ரைன் இராணுவத்தின் முதுகெலும்பு. நான் அதை நிறுத்தினால், அவர்களின் முழு பாதுகாப்பு அமைப்பும் சரிந்துவிடும் என அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்(Elon musk) எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
ரஸ்யா - உக்ரைன்(Ukraine) போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவரை உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து ஆதரித்தார்.
எலான் மஸ்க் மிரட்டல்
ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதும் இருதரப்பிற்கும் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளார்.
எனினும் அவர் ரஸ்யா பக்கம் ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் அண்மையில் ட்ரம்ப் ஜெலன்ஸ்கி இடையில் இடம்பெற்ற உரையாடல் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளானது.
அதனை தொடர்ந்து உக்ரைனுக்கான இராணுவ உதவிகளையும் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஜெலென்ஸ்கிக்கு எலான் மஸ்க் பகிரங்க மிரட்டல் விடும் வகையில் எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் பதிவு
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
I literally challenged Putin to one on one physical combat over Ukraine and my Starlink system is the backbone of the Ukrainian army. Their entire front line would collapse if I turned it off.
— Elon Musk (@elonmusk) March 9, 2025
What I am sickened by is years of slaughter in a stalemate that Ukraine will…
“எனது ஸ்டார்லிங்க் அமைப்பு உக்ரைன் இராணுவத்தின் முதுகெலும்பு. நான் அதை நிறுத்தினால், அவர்களின் முழு பாதுகாப்பு அமைப்பும் சரிந்துவிடும். மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களால் நான் சோர்வடைந்துள்ளேன்.
உக்ரைன் இந்தப் போரில் தோற்பது உறுதி. ஆனால் உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படுவதை ஜெலென்ஸ்கி விரும்பவில்லை.
தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஜெலென்ஸ்கி வேண்டுமென்றே அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 14 மணி நேரம் முன்

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.. இவர்தான், போட்டோ இதோ Cineulagam
