ஹபரணை வனப்பகுதியின் இசை விழா நீதிமன்ற உத்தரவையடுத்து இரத்து
அண்மைய வாரங்களில் ஹபரணையில் யானை வழித்தடத்தில் நடத்தப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்திய அடர்ந்த வனப்பகுதியின் இசை விழா நீதிமன்ற உத்தரவையடுத்து இரத்து செய்யப்பட்டுள்ளது.
பெப்ரவரி 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருவிழா ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நிகழ்வை நிறுத்துமாறு ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றம் வழங்கிய நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று இந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதனையடுத்து நிகழ்வின் அனுமதிச்சீட்டுக்களுக்கான பணம் திருப்பி தரப்படும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹபரணையில் பெப்ரவரி 17 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த டீப் ஜங்கிள் மியூசிக் என்ற அடர்ந்த வனப்பகுதி கலாசார விழாவினால் மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றாடல் வலயமான கரந்தகஸ்வௌ வனச்சரகத்திற்கு ஏற்படும் சுற்றாடல் பாதிப்பு குறித்து சுற்றாடல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
திட்டமிட்டபடி இசை நிகழ்ச்சி நடந்தால் வனவிலங்குகளுக்கும், வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் அச்சம்
வெளியிட்டிருந்தனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
