பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்!
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் இளைய சகோதரருமான சபேஷ் காலமானார்.
அவர் இன்றையதினம்(23) உடல்நலக்குறைவால் தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
தேவாவிடம் உதவி இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய சபேஷ், மற்றொரு சகோதரரான முரளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
உயிரிழப்பு
தனியாக இவர் 'சமுத்திரம்', 'தவமாய் தவமிருந்து', 'மாயாண்டி குடும்பத்தார்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அத்துடன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இவருடைய மகன் கார்த்திக் சபேஷ், திரைப் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுநீரக பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபேஷ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவருடைய மறைவுக்கு நடிகர்கள், இசைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



