தாதியர்களின் சீருடை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதியர்கள் அணியும் சீருடைகள் குறிப்பிட்ட மதம் அல்லது கலாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு மாற்றப்படுமானால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அரச தாதியர் ஐக்கிய ஒன்றியம் சுகாதார அமைச்சருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
ஒன்றியத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தாதியர் சீருடை எந்தவொரு மதம் அல்லது கலாச்சாரக் கோரிக்கையையும் முன்னிறுத்தி மாற்றப்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாதியர் சீருடையை மத அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று கோரினால், அதேபோல் தாதியர்கள் அணியும் ஹெட்ஸ்கார்ஃப் மாற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வரலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் பிரிவினைவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன், தாதியர் சங்கத்துடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அரச தாதியர் ஐக்கிய ஒன்றியம், சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam