தொடரும் கொடூர கொலைச் சம்பவங்கள்: அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் இடம்பெறும் கொலை சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளமைக்கு, அம்மாகாணங்களின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளே காரணம் என பொலிஸ்மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான அதிகாரிகளை உடனடியாக நீக்கி, பொருத்தமான அதிகாரிகளை நியமிக்குமாறு அமைச்சர் இந்த கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெறும் கொலை சம்பவங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |