வெலிக்கடை சிறையில் படுகொலைச் செய்யப்பட்டவர்களுக்கு சிலை வைக்க நடவடிக்கை - நீதிமன்றில் வழக்கு பதிவு
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று(20.07.2026) திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது, ஏற்பாட்டு குழுவை சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி வழக்கு திகதியிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கைதிகளால் படுகொலை
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25ஆம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்சக் கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள், ஜூலை 25மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்