மொடல் அழகியின் தலை பானையிலிருந்து மீட்பு: ஹொங்கொங்கில் கொடூரம்...!
ஹொங்கொங் நாட்டில் மொடல் அழகி ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, தலையை மட்டும் பானை ஒன்றில் மறைத்து வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட குறித்த மொடல் அழகியை பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றைய தினம் (01.03.2023) மொடல் அழகியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரபல மொடல் அழகியாக இருந்தவர் அபிசோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற இவர், சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வந்துள்ளார். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இவரைச் சுமார் ஒரு லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
பொலிஸார் சோதனை
அபிசோய்க்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதையடுத்து பொலிஸார் அவரைத் தேடி வந்துள்ளனர்.
இது குறித்து சந்தேகத்தின் பேரில் மொடல் அழகியின் மாமியார் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
இப்போது குளிர்சாதனப் பெட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பையினால் சுற்றப்பட்ட நிலையில் மொடல் அழகியின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். ஆனால், தலை மற்றும் கை கால்களை மட்டும் காணவில்லையெனத் தெரிவித்துள்ள பொலிஸார், அந்த உறுப்புகளைத் தேடி வந்ததுள்ளனர்.
4 பேர் கைது
இந்த நிலையில், அவரது தலை மட்டும் சூப்கள் வைக்கும் பெரிய பானையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டப் பொலிஸார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஏனைய உடற்பாகங்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மொடல் அழகியின் அபிசோயின் கணவர் மற்றும் மாமனார் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், சம்பவத்தன்று மொடல் அழகியின் அழகி அபிசோய் வாகனத்தில் வைத்துத் தாக்கப்பட்டதால் மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் அவரைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடற்பாகங்களை மறைத்து வைத்திருந்த விவரம் தெரிய வந்துள்ளது.
கோடிக் கணக்கான சொத்துக்காக இந்தக் கொடூர கொலை நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.