கொழும்பில் மாணவி கொலை: விசாரணைத் தகவல்கள் ஏன் ஊடகங்களிடம் வழங்கப்பட்டன - நாடாளுமன்றில் கேள்வி (video)
கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைத் தகவல்களை ஏன் பொலிஸார் ஊடகங்களிடம் வழங்கினர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (20.01.2023) உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் அண்மையில் சக மாணவரின் கத்தி குத்துக்கு இலக்காகி மரணித்த சம்பவம் தொடர்பான விசாரணைத் தகவல்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டன.
விசாரணைகளின் போது வெளியாகிய தகவல்
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவ்வாறு தகவல்களை ஊடகங்களில் வெளியிடுவது விசாரணைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறான விசாரணைத் தகவல்கள் இரகசியமாக பேணப்பட வேண்டியது அவசியமானது. இது குறித்து சபாநாயகர் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
