காதல் விவகாரத்தினால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட 17 வயது யுவதி! விசாரணையில் வெளியான தகவல்
மொனராகலை பொலிஸ் பிரிவில் தனது இளம் வயது மகளை கத்தியால் வெட்டிக்கொலை செய்து விட்டு தந்தையொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர், தனது 17 வயது மகளையே நேற்று (29.04.2023) பகல் வீட்டில் வைத்து
வெட்டிக்கொலை செய்துள்ளார்.
மகளின் காதல் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த அவர், இன்று மகளைக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை
கொலையைப் புரிந்த குடும்பஸ்தர், வீட்டுக்கு அருகிலுள்ள காணிக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரிவந்துள்ளது.

இதன்போது விபரீத முடிவினால் உயிரிழந்த 49 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மகளின் காதலன் இராணுவத்தில் கடமையாற்றுவதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam