ஆர்மி சூட்டி'யின் இரகசிய உத்தரவு - சுற்றுலா விடுதியொன்றில் 7 பேருக்கு வைக்கப்பட்ட குறி
பாதாள உலகக்கும்பல் தலைவரான ஆர்மி சூட்டி வழங்கிய ஒப்பந்தத்தின் பேரில், மிதிகம பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியின் உரிமையாளர் உட்பட 07 குடும்ப உறுப்பினர்களை சுட்டுக்கொல்ல இராணுவத்தில் இருந்து தப்பியோடிய ஒருவர் தயாராகி வந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்த தயாராக இருந்த T-56 ஆயுதம், 30 தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கொலையாளி கைது செய்யப்பட்டதை அடுத்து விடயம் தெரியவந்துள்ளது.
இந்த பாதாள உலகக்கொலையாளி, மிதிகம ஹோட்டலில் நடந்த விருந்தின் போது தொழிலதிபரையும் அவரது 07 குடும்ப உறுப்பினர்களையும் கொல்லத் தயாராகி இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஹோட்டல் உரிமையாளர் கப்பம் பெறும் பணத்தை பாதாள உலகத் தலைவருக்கு செலுத்தாததால் அவரைக் கொல்ல முயற்சித்ததாகவும் தெரியவந்துள்ளது.

பாதாள உலகக் கொலையாளி கைது
பேலியகொட குற்றப்பிரிவின் , உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகலவுக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று (19) அதிகாலை மிதிகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த பாதாள உலகக் கொலையாளி கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் கிட்டத்தட்ட 05 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் எனவும், 35 வயதா தங்காலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

டுபாயில் உள்ள ஒரு இராணுவ அதிகாரியே தனக்கு கொலை ஒப்பந்தத்தை வழங்கியதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு உதவிய மேலும் பல பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும்,பேலியகொடை குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |