வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான 700 அத்தியாவசிய வாகனங்களை உள்ளடக்கிய வாகனத் தொகுதியை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தள்ளார்.
இந்த வாகனத் தொகுதியில் 100 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் (gully bowsers), 175 டிராக்டர்கள், 100 பேக்ஹோக்கள் (backhoes), 160 டிப்பர் ரக வாகனங்கள் (tipper trucks), 75 மோட்டார் கிரேடர்கள் (motor graders) மற்றும் 90 முச்சக்கர வண்டிகள் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு ரூபா 3,350 மில்லியன் செலவு
பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள் அத்தியாவசிய வாகனங்கள் பற்றாக்குறையாலும், தற்போதுள்ள வாகனங்கள் பழமையாக அல்லது சேதமடைந்து இருப்பதாலும் தமது பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்க நிறுவனங்களில் உள்ள வாகனங்களின் பராமரிப்பு மற்றும் உயர் எரிபொருள் செலவினங்கள் காரணமாகவே புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளர்.
"V8, BMW மற்றும் பிற விலை உயர்ந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளை அரசாங்கத்தால் தாங்க முடியாது" என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க நிறுவனங்களில் உள்ள 4,000 வாகனங்களின் பராமரிப்பிற்காக அரசாங்கம் ரூபா 3,350 மில்லியன் செலவினை ஏற்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |