வெட்டி கொலை செய்யப்பட்ட டேன் பியசாத்தின் சகோதரர்
ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் நேற்றிரவு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த கொலையை செய்துள்ளனர்.
கலங்சூரிய ஒழுங்கை,மீதொட்டுமுல்ல , வெல்லம்பிட்டி என்ற முகவரியில் வசித்து வந்த 34 வயதான பிரகாஸ் திலின குமார என்ற நபரே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தினமும் மாலை நேரத்தில் நண்பர்களுடன் ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் கொலையுண்ட நபர், சிலரை வெட்டி காயத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தது அண்மையில் பிணையில் விடுதலையாகி வந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் படி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கு கிழமை வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி கையெழுத்திட்டு வந்த குற்றவாளி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்ட நபர் சமூக செயற்பட்டாளரான டேன் பியசாத்தின் சகோதரர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
டேன் பியசாத் இனவாத ரீதியில் செயற்பட்டு வரும் நபர், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத ரீதியிலான பிரசாரங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்து இருந்தார்.