இரு வெவ்வேறு இடங்களில் நடந்த கொலைச்சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் அன்றாடம் கொலை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. எனினும் இன்று நடந்த இரு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
காணித் தகராறில் பெண் படுகொலை
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் காணித் தகராறில் மாமியாரை மருமகன் குத்திப் படுகொலை செய்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான லியனகே மேரி ஸ்வர்ணா (வயது 57 ) என்பவரே தனது மருமகனால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கம்பஹா தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை (29.03.2023) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மருமகனான 43 வயதுடைய நபர் கம்பஹா தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் சண்டையால் ஒருவர் படுகொலை
கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனுமலேவத்த பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காதல் விவகாரமே கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this Video