நபரொருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை! 29 வயது நபர் தப்பியோட்டம் - தென்னிலங்கையில் கொடூர சம்பவம்
மாத்தறை - அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் நபரொருவர் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
தலை துண்டிப்பு
இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் தலையே அவரது வீட்டில் வைத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகளும், மனைவியும் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் தப்பியோட்டம்
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 29 வயது சந்தேகநபர் தற்போது தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேகநபர், உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் சந்தேகம்
இதேவேளை துண்டிக்கப்பட்ட தலையை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ள நிலையில் அதனை நில்வளா கங்கையில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் வீட்டில் நேற்று இரவு தொவிலாட்டம் நடத்தப்பட்டதாகவும், சந்தேகநபரின் பெற்றோர் மீது சூனியம் செய்யப்பட்டதாக கூறி இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri