முனிதரனை விடுவித்த கொழும்பு நீதிமன்றம்!
கொழும்பு- பொரளை சகல புனிதர்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரான்சிஸ் முனிதரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேவாலயத்தில் பணிபுரியும் இவரே குறித்த தினத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.
எனினும் அவர் ஏழாவது சந்தேக நபராக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரை தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு போதிய குற்றச்சாட்டுக்கள் இல்லை என கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.
இதனையடுத்தே கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய அவரை விடுதலை செய்யுமாறு இன்று உத்தரவு பிறப்பித்தார்.
ஏற்கனவே இவர் கடந்த சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அன்றைய தினம் விடுவிக்கப்படவில்லை.
[



