முரளி கடுமையாக மனம் உடைந்து போயிருந்தார் : அர்ஜுன வெளியிடும் தகவல்கள்
நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்களை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க வெளியிட்டுள்ளார்.
அர்ஜூன தலைமையிலான அணியில் முரளீதரன் நீண்ட காலம் விளையாடி உள்ளார்.
1996ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டி தொடரில் அர்ஜுன, முரளி உள்ளிட்ட அணியினர் உலக கிண்ணத்தை வென்று கொடுத்திருந்தனர்.
800 திரைப்படம் தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பில் அர்ஜுன பங்கேற்று இருந்தார்.
இதன்போது "சில சந்தர்ப்பங்களில் முரளிதரன் என்னை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என அழுது புலம்புவார் என அர்ஜுன குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்..
"அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பந்தை வீசி எறிவதாக முரளிதரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நெருக்குதல்கள் காரணமாக முரளி கடுமையாக மனம் உடைந்து போயிருந்தார் என தெரிவித்துள்ளார்.
நல்ல பண்புகளை கொண்ட முரளி
"முரளி அடிக்கடி என்னிடம் வந்து அண்ணா என்னை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று கூறுவார், என்னால் உங்களுக்கும் பிரச்சினை நான் வீடு செல்கிறேன் என்பார்"
நான் சில சந்தர்ப்பங்களில் நல்லவிதமாகவும் சில சந்தர்ப்பங்களில் கடுந்தொனியிலும் பேசி அவரை அணியில் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்றேன்.
மிக இளவயதில் விளையாடிய போது இருந்த அதே பண்புகள் அதே மரியாதை முரளியிடம் காணப்படுகின்றது. பெரியோரை மதிக்கும் பண்பு அவரிடம் இன்றும் காணப்படுகின்றது.
பணம் புகழ் என்பனவற்றிற்கு அப்பால் நல்ல பண்புகளை கொண்டவராக முரளியை நான் குறிப்பிடுவேன்.

சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு: அம்பலமான தகவல்
கண்டியில் நடைபெற்ற பாடசாலை போட்டியொன்றில் நான் முரளியை அடையாளம் கண்டு தேசிய அணிக்கு அழைத்து வந்தேன்.
அவுஸ்திரேலியா முரளிக்கு கடுமையான நெருக்குதல்களை ஏற்படுத்தியது. பின்னர் விதியின் விளையாட்டு அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக முரளி செயற்பட்டார்.
முரளி 800 விக்கட்டுகளை வீழ்த்தியதனை விடவும் இந்த விடயத்தை நான் ஓர் சாதனையாக பார்க்கின்றேன் என அர்ஜூன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |