பாண் துண்டினால் தாக்குதல்! மாநகர சபை அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை
மஹரகம மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, காலை உணவாக வழங்கப்பட்ட பாண் துண்டினால், உப தலைவர் சுனில் பியரத்னவை, மஹரகம நகரசபை உறுப்பினர் நிஷாந்த விமல சந்திர தாக்கியுள்ளார்.
பாண் துண்டு தாக்குதலால் இன்று நடைபெற்ற மஹரகம நகரசபையின் மாதாந்த பொதுக் கூட்டம் காரசாரமானதை அடுத்து குழப்பத்தை கட்டுப்படுத்த சபையை 5 நிமிடங்களுக்கு தலைவர் ஒத்திவைத்தார்.
மாநகர சபை உப தலைவர் வாகனம் கொள்வனவு நடவடிக்கைக்கு புறம்பாக வாகனம் கொள்வனவு செய்தமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் நிஷாந்த நிஷாந்த விமலச்சந்திர கருத்து தெரிவிக்கையில், பிரதித் தலைவர் சுனில் பியரத்ன குற்றச்சாட்டை மறுத்து கருத்து தெரிவிக்க சென்ற போது இருவருக்குமிடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.
மாநகர சபை தவிசாளர் பிரதி தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஆகியோருக்கிடையில் தனிப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்துக்கொண்டிருக்கும் போதே நிஷாந்த விமலச்சந்திர, காலை சிற்றுண்டிக்காக கொடுத்த ரொட்டித் துண்டினால் பிரதித் தலைவரை தாக்கியுள்ளார்.



