சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பல பில்லியன் நிர்மாணத் திட்டம் இடைநிறுத்தம்
கடந்த 18 மாதங்களில் திட்டம் மூன்று சதவீதத்திற்கும் குறைவான முன்னேற்றத்தைக் காட்டியதை அடுத்து, பல பில்லியன் ரூபாய் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் சீன கூட்டு முயற்சிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை இலங்கையின் நீர்ப்பாசன அமைச்சு நிறுத்தப்போவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இத்தகவலைஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தின் இரண்டு பெரிய நீர்த்தேக்கங்களான மஹகித்துல மற்றும் மஹாகிருளவை நிர்மாணிப்பதற்கான 10.7 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிர்மாணிப்புத்திட்டம் தாமதம்
எனினும் இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால், குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு நிதியை விடுவிக்க முடியாது என ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியுள்ளதால் இந்த நிர்மாணிப்புத்திட்டம் மேலும் தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் சீனாவின் சீஏஎம்சி இன்ஜினியரிங் லிமிடெட், மற்றும் குய்ன்டோ முனிசிபல் கொன்ஸ்ட்ரக்ஷன் குரூப் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சிக்கு இந்த நிர்மாணிப்புத்திட்டம் வழங்கப்பட்டது.
2021 மார்ச் 31 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட இருந்தது.
இதற்கிடையில் இந்த மாதம் வெளியிடப்பட்ட திட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜூன் இறுதிக்குள் 45.4 பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, எனினும் 2.4 சதவீதமான பணிகளே முடிக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்ததாரர்களுக்கு, பணியாளர்கள் மற்றும் உபகரணங்களைத் திரட்டுவதில் தாமதம், ஒப்பந்தக்காரரின் தளத்தை நிறுவுதல் மற்றும் ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்ததாரரின் நிர்வாகத்தின் பரந்த திறமையின்மை ஆகியவையே இதற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து திறைசேரி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கூட்டு முயற்சியை இடைநிறுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.