நான் அறியாத முள்ளிவாய்க்கால்: அடுத்த சந்ததியாகிய சாகுவின் வெளிப்பாடு
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுகளை அடுத்த சந்ததிக்கு கடத்திச் சென்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
முப்பதாண்டு கால போரின் விளைவுகளை பூச்சிய நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது என்றால் அந்த பேரவலத்தின் வலியின் உணர்வுகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதன் மூலமே அந்த துயரமிகு வலியின் உணர்வுகளை உயிர்ப்போடு பேண முடியும்.
புலம் பெயர் மண்ணில்
புலம் பெயர் மண்ணில் வாழும் ஈழத்தமிழர்கள் இது தொடர்பில் கூடிய கவனமெடுத்து அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.
அதே வேளை தாயகத்திலும் முள்ளிவாய்க்கால் துயரின் வலிமிகுந்த உணர்வுகளை அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்ப்பதில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தாயகப் பரப்பில் நடைபெறும் நினைவேந்தல்கள் முதன்மை பெற்று வருகின்றன.
இத்தகைய நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் தாயகப் பரப்பில் நிகழும் நிகழ்வுகள் அந்த முயற்சியின் விளைவுகளாக தோன்றி நிற்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நித்தம் கவிதை
2009 ஆம் ஆண்டில் பிறந்நிருக்காத அதன் பின்னர் பிறந்திருந்த வன்னியில் பிரபல்யமாக இருந்துவரும் கவிஞர் சாகுவின் " நான் அறியாத முள்ளிவாய்க்கால்" என்ற கவிதை சிறப்புப் பெற்றுள்ளது.
கல்விப்புல மாற்றங்களை முன்னெடுத்து அதனூடாக இனவழிப்பின் துயர நிகழ்வினை கடத்திச் செல்லும் முயற்சியில் தமிழர்கள் வெற்றி நோக்கி நடந்து செல்கின்றனர் என்பதன் சான்றாகவே சாகுவின் கவிதையை நோக்கலாம்.
நான் அறியாத முள்ளிவாய்க்கால்
இடி சத்தங்கள் போல
மண்ணை
ஒளிக்கதிர் நனைக்கையில்,
நிலமே அதிரும்
வேளை உயிர்
துறந்தவர்களை
நினைக்க இயலுமா?
போர் முழக்கமும்
தொடர் குண்டு சத்தமும்
கதை துளைக்கும்
வேளையில்,
உடம்பில் துளைத்த
சன்னங்களின் எண்ணிக்கை
எத்தனையோ
யார் அறிவார்?
ஆயுதப் போர் அதனை
புரிந்து உயிர்
மாண்டதனை இங்கே
வீரச்சாவு என
கொள்கையில்,
அவர் போலன்றி
உயிர் மாண்டவர்களின்
நிலையை இங்கே?
அணு அணுவாக
வலியில் துடித்து
காயம் தழுவியல்லவா,
இங்கே உயிர் இழந்தார்.
துரத்தித் தான்
உயிரை கொன்றான்
இங்கு எதிரி என்றார்.
எண்ணுகிறேன்;
இக்கணமே மனம்
வலியில் துடிதுடிக்கின்றது;
அவர்களை நினைத்து.
நான் பிறக்க முன்
நான் பிறந்த மண்ணில்
நடந்த துயரம் இது.
தேடி அறிந்த போது
தேகம் சிலிர்த்து போனது.
தேவை என்னவோ
இனி புது வழி.
வரிகள் சாகு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
