மட்டக்களப்பு மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கறுத்தப்பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்ததுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..! திமுக - அதிமுக ஆட்சி அமைக்க முயன்றால் தவெகவின் 107 எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவார்கள்
மாநகரசபை முதல்வரின் கோரிக்கை
இந்நிலையில், இந்த மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற வகையில் நேற்றைய நாளில் மாநகரசபை உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து வருகை தருவதுடன் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்துமாறு மாநகரசபை முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது மாநகரசபை உறுப்பினர் அருணால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள் கறுப்புப்பட்டிய அந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தனர். அதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் வழமைபோன்று ஆரம்பிக்கப்பட்டன.







அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri