இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன்

Kilinochchi Mullaitivu Mullivaikal Remembrance Day
1 மாதம் முன்

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சேவைச்சந்தையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் | Mullivaikkal Porridge Serving Event

“2009ம் ஆண்டு இந்த மண்ணிலே மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்ச நாளாகிய மே 18 நினைவு நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு ஆயத்தமாகி வருகின்ற இந்த வேளை, எமது உயிரோடும் உள்ளத்தோடும் இணைந்துள்ள இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு மிக முக்கியமானது.

இந்த கஞ்சியின் பின்னால் இருக்கக்கூடிய உணர்வுகளையும் வலிகளையும் இந்த இடத்தில் பேசுவது மிக முக்கியமானது. 2009ம் ஆண்டு இதே காலப்பகுதியில் எங்களுடைய மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நாங்கள் நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.

கையெது மெய்யெது என்று தெரியாத சதை குவியலுக்குள்ளே எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று ஒவ்வொரு பிணங்களாக பிரட்டி பார்த்ததை நாங்கள் நினைத்து பார்க்கின்றோம்.

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் | Mullivaikkal Porridge Serving Event

போர் பாதுகாப்பு வலயங்கள் என சொல்லி அங்கு போகவிட்டு பல்குழல் ஏவுகணைகளாலே தாக்கி, எங்களுடைய உடல்களை சிதைத்து, வெறும் பக்கோ இயந்திரங்களால் வெட்டி புதைத்த காலங்களை நினைத்து பார்க்கின்றோம்.

இரசாயன குண்டுகளையும், கொத்து குண்டுகளையும் பாவித்து எங்களுடைய இனத்தை அழிப்பு செய்த நாட்களை நினைத்து பார்க்கின்றோம்.

அந்த காலக்கட்டத்தில் உணவின்றி கஞ்சி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அந்த இடத்திலே கஞ்சிக்காக எங்களுடைய பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் செல்களினாலே துவம்சம் செய்யப்பட்ட அந்த நாட்களை நினைத்துப் பார்க்கின்றோம்.

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் | Mullivaikkal Porridge Serving Event

வெறும் தரப்பால் கொட்டில்களாக இருந்த அந்த இடங்களிலே ஒவ்வொரு நாளும் செத்து செத்து மலையாக குவிந்துகொண்டிருந்த பிணங்களினுடைய முகங்களை நாங்கள் நினைத்து பார்க்கின்றோம்.

எனது அப்பா , கணவன், பிள்ளைகள் என்று சொல்லி ஒவ்வொரு முகங்களையும் புதைத்துவிட்டு வெளியேறிய அந்த கணப்பொழுதுகளை நினைத்துப்பார்க்கின்ற அந்த பொழுதிலேதான் இந்த கஞ்சி எங்களோடு சேர்ந்திருக்கின்றது.

இந்த கஞ்சிக்கு பின்னால் எங்களுடைய பசி இருந்திருக்கின்றது, வலி இருந்திருக்கின்றது, போராட்ட உணர்வு இருந்திருக்கின்றது, எங்களுடைய அர்த்தமுள்ள அரசியல் அபிலாசை இருந்திருக்கின்றது.

இத்தனையாயிரம் மக்களுடைய விடுதலைக்ககாக அந்த மண்ணிலே தங்களுடைய உயிர்களை ஈர்ந்துபோன நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது எண்ணமும், கனவும் இந்த கஞ்சியிலே இருக்கின்றது.

நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அந்த மண்ணிலே வாழ்ந்துகொண்டிருந்தபொழுது, வெறும் 65ஆயிரம் மக்கள்தான் வாழ்கின்றார்கள் என்று சொல்லி பொருளாதார தடையை விதித்து உணவு பஞ்சத்தை ஏற்படுத்தி அந்த மக்களை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்த அந்த தருணத்தில் தான் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அந்த கஞ்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி பசியாற்றியிருந்தது.

அதன் காரணமாக படுகொலைக்கு உயிர்தப்பிய பலர் பசியிலிருந்து தப்புவதற்கான சூழலை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஏற்படுத்தியிருந்தது.

அதனை இன்று நாங்கள் நன்றியோடு நினைவுகூர வேண்டும். ஒரு இனத்தினுடைய விடுதலையிலே, போராட்டத்தின் சக்தியாக இருப்பது பட்டினி கிடத்து இந்த இனத்தின் விடுதலைக்காக உயிரை அர்ப்பணம் செய்வது. அந்த உன்னத தியாகத்தை இந்த மண் செய்திருக்கின்றது.

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் | Mullivaikkal Porridge Serving Event

அந்த காலத்திலே கஞ்சிக்காக தாய் நின்றபொழுது, களத்தில் நின்ற பிள்ளை இன்று இல்லை. தங்கள் பிள்ளைகளிற்கு கஞ்சி வாங்கி ஊட்டிவிட வேண்டும் என்பதற்காக அந்த மண்ணிலே மனைவி நின்றபொழுது அந்த கணவர் இன்று இல்லை. அந்த கணவனும் மனைவியும் களத்திலே நின்றபொழுது அந்த கஞ்சிக்காக நின்ற பிள்ளைகள் இன்று இல்லை.

அத்தனை துயரத்தை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை இந்த மண்ணிலே அரங்கேற்றி, அதன் உச்சத்தை முள்ளிவாய்க்கால் தொட்டிருக்கின்றது.

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் | Mullivaikkal Porridge Serving Event

உலக வரலாற்றில் என்றும் பதிந்திருக்கப்படமுடியாத மிகக் கொடூரமான இனப்படுகொலையை இந்த மண்ணில் நிகழ்த்தியதன் சாட்சியாக எங்களுடைய உணர்வுகளோடு, உள்ளத்தோடு பின்னி நிக்கின்ற ஒரு பொருளாக இந்த கஞ்சி இருக்கின்றது. இந்த கஞ்சி எங்களுடைய எதிர்கால சந்ததியிடம் கொண்டு செல்லப்படும்.

எங்களுடைய மண்ணிலே மலர்கின்ற ஒவ்வொரு குழந்தையும் இந்த கஞ்சியினுடைய உணர்வையும், மகிமையையும் புரிந்துகொண்டு சக்தியுள்ள அரசியல் விடுதலையை பெற்றெடுப்பதற்கான உறுதியை இந்த கஞ்சி அளிக்கும். இந்த கஞ்சியினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வழங்குவதையிட்டு நாங்கள் நிறைவடைகின்றோம்.

இந்த கஞ்சியினுடைய ஒவ்வொரு பருக்களும், ஒவ்வொரு துளியும், வியர்வையையும், இரத்தத்தையும் எங்களுடைய சந்ததியிடம் கடத்திச்செல்லும். இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற அடிப்படை நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும் என்பது நம்பிக்கை” என தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, உடுப்பிட்டி, Markham, Canada

30 Jun, 2022
மரண அறிவித்தல்

சங்கத்தானை, சாவகச்சேரி, Stavanger, Norway

06 Jul, 2022
மரண அறிவித்தல்

குருநகர், Champigny-Sur-Marne, France

20 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வண்ணார்பண்ணை

05 Jul, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

05 Jul, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

மன்னார், புதுக்குளம்

04 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom, சிட்னி, Australia

27 Jun, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, உருத்திரபுரம்

07 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

08 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, London, United Kingdom

01 Jul, 2017
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ostermundigen, Switzerland, பேர்ண், Switzerland

09 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

கொழும்பு, ஊர்காவற்துறை, நியூ யோர்க், United States

03 Jul, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சிட்னி, Australia

07 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Rochester, United States

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், ஸ்ருற்காற், Germany

01 Jul, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, கரம்பன், Markham, Canada

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கொழும்பு, Scarborough, Canada

06 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, காரைநகர், நல்லூர், Toronto, Canada

07 Jul, 2019
மரண அறிவித்தல்

நீர்வேலி, வண்ணார்பண்ணை, Villeneuve-Saint-Georges, France

03 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், பருத்தித்துறை, London, United Kingdom

07 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வண்ணார்பண்ணை, Ottawa, Canada

30 Jun, 2022
மரண அறிவித்தல்

நீர்வேலி, Montreal, Canada

03 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

04 Jul, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, பரிஸ், France

24 Jun, 2022
நன்றி நவிலல்

உருத்திரபுரம், மண்டைதீவு, Mönchengladbach, Germany, England, United Kingdom

05 Jun, 2022
மரண அறிவித்தல்

வவுனியா, Ajax, Canada

03 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கிளிநொச்சி, Brampton, Canada

18 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

07 Jul, 2021
மரண அறிவித்தல்

நுணாவில், சாவகச்சேரி, கந்தர்மடம், கொழும்பு, Toronto, Canada

04 Jul, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Zürich, Switzerland

08 Jul, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், கன்பெறா, Australia

02 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

29 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அரசடி

01 Jul, 2022
மரண அறிவித்தல்

புத்தூர், அம்பனை, கொழும்பு

30 Jun, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US