முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள்
கிளிநொச்சி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் இன்று பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
செய்தி - ராகேஸ்
களுவாஞ்சிகுடி
முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுளை நினைந்து வருடாந்தம் வழங்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று இன்றையத்தினம் செவ்வாய்கிழமை(13.05.2025) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றது.
செய்தி - ருசாத்
நல்லூர்
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், பொது அமைப்பினர் இணைந்திருந்தனர்.
வீதியால் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றனர்.
செய்தி - ராகேஸ்
வடமராட்சி கிழக்கு
முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், இன்றையதினம்(13) மாலை 05.30 மணியளவில் வடமராட்சி கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது.
இதில் வடமராட்சி கிழக்கின் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர்.
செய்தி - எரிமலை
வவுனியா
தமிழின அழிப்பின் 16ம் ஆண்டை முன்னிட்டு வவுனியா வாடி வீட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததில் மரணித்த பொது மக்களின் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவினால் ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வாடி வீட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
செய்தி - திலீபன்
அம்பாறை
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நினைவேந்தல் பிரார்த்தனையும் சங்கத்தின் மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இன்று நடைபெற்றது.
சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக இடம்பெற்றதுசிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவனும் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் விசேட பூசை வழிபாடு இடம் பெற்ற பின்னர் முள்ளிவாய்க்கால் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
செய்தி - பாருக்
மூதூர்
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(13) மூதூர் தங்கபுரத்தில் நினைவேந்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மூதூர்கிழக்கில் கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்ட தடைகள் கைதுகள் நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றின் காரணமாக இவ்வருட நினைவேந்தல் செயற்பாடுகளை சட்ட ஏற்பாடுகளுக்கமைய நேர்த்தியாக ஒழுங்கமைத்துச் செயற்படுத்தும் நோக்கில் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்துக்கான நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
செய்தி - ரொஸான்

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 12 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
