விமல் வீரவன்சவுக்கு நடந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த மகிந்த ராஜபக்ச!
பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள போர் வீரர் நினைவுத்தூபிக்கு நாட்டின் எந்த பிரஜைக்கும் செல்வதற்கான சுதந்திரம் இருக்கும் நிலையில் விமல் வீரவன்சவுக்கு நடந்த சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போர் வீரர்களை நினைவுகூரும் பொருட்டு மலர்க் கொத்துகளுடன் பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள போர் வீரர் நினைவுத்தூபிக்கு சென்ற விமல் வீரவன்ச மற்றும் அவருடைய குழுவினருக்கு நினைவிடத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
விமர்சிக்கப்பட்ட விடயங்கள்
இதனால் கடும் கோபமடைந்த விமல் வீரவன்ச தரப்பு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பெரும் குழப்பத்திம் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் மகிந்தவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்
விமலுக்கு ஏற்படுத்திய தடை தவறான செயற்பாடாகும்.அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.கிடைக்க பெற்றிருக்கும் சுதந்திரத்தில் அரசாங்கம் எதிரணியினரை கடுமையாக தாக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
17 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை - குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்: முள்ளிவாய்க்காலில் முழக்கம்!