தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும் - விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day nandikadal
By Kumar May 18, 2026 04:44 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவு என்பது கடந்த கால வரலாற்று நினைவு தினம் மட்டுமல்ல, அது தமிழர்களின் எதிர்கால குறித்த பொறுப்பை தமிழர்களுக்கு உணர்த்தும் நாள் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு பேரிடி! அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம்

இலங்கை மக்களுக்கு பேரிடி! அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம்

தமிழ் மக்களின் அழிவுக்கு

மேலும் தெரிவிக்கையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது தமிழ் மக்கள் வெறுமனே ஒன்று கூடி நினைவஞ்சலி செலுத்தும் நாளாக மட்டும் கருதப்பட முடியாது.

அது, இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் இறுதி நாள் மட்டுமல்ல அதுவே போராட்டத்தின் தொடர்ச்சியாகும்.

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும் - விடுக்கப்பட்ட கோரிக்கை | Mullivaikkal Memorial Day Become A Day Tamils Take

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது வடக்கு கிழக்கில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கானது மட்டுமல்ல அந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்கான போராட்டமாகவே அமைந்தது.

எனவே தமிழர்கள் மிகப்பெரிய வரலாற்றுப் பொறுப்பை தோளில் சுமக்க வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் அழியாத வலியையும், வெளிவராத உண்மைகளையும் தாங்கி நிற்கிறது. ஆயுதப் போராட்டம் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது? உலக நாடுகள் மற்றும் சர்வதேச அரசியல் சக்திகள் எந்த வகையில் அந்த போரின் முடிவை வடிவமைத்தனர்?

போரின் இறுதிக்கட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் எவ்வாறு உயிரிழந்தனர்? போராளிகள் எவ்வாறு அழிக்கப்பட்டனர்? மக்கள் எத்தகைய மனிதாபிமான பேரழிவுகளை எதிர்கொண்டனர்? போன்ற பல்வேறு கேள்விகளுடன் இன்னமும் நீதிக்கான போராட்டங்கள் தொடர்கின்றன.

தமிழ் மக்களின் அழிவுக்கு இது வரை யாரும் பொறுப்பு கூற முடியாத நிலையே காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி

தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு

தமிழினம் தனது அரசியல் உரிமைகளையும் தேசிய அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வடிவங்களில் போராடி வந்துள்ளது.

அந்தப் போராட்டம் வெறும் ஆயுதப் போராட்டமாக மட்டுப்படுத்தப்படவில்லை. கல்வி, சமூக முன்னேற்றம், விவசாயம், பொருளாதாரம், கலை, கலாசாரம் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் தமிழர் சமூகத்தின் தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும் - விடுக்கப்பட்ட கோரிக்கை | Mullivaikkal Memorial Day Become A Day Tamils Take

ஆனால் இன்று, யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட பல கிராமங்கள் இன்னமும் முழுமையான மறுசீரமைப்பைப் பெறவில்லை. வேலைவாய்ப்பின்மை, வறுமை, கல்வியில் பின்னடைவு, போதைப்பொருள் பரவல், இளைஞர்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு, விவசாயம் மற்றும் கடற்றொழில் சமூகங்களின் வாழ்வாதார சீரழிவு, பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் பொருளாதார சிக்கல்கள், மனநல பாதிப்புகள், காணிப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு சவால்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 

ஒரு காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தங்களது வருமானத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த மக்கள் இன்று வாழ்வாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நினைத்திருந்தால் கடந்த 17 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள் உட்கட்டமைப்பு, கல்வி, தொழில்நுட்பம், தொழில் முயற்சி, விவசாயம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்க முடியும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக 

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் மீளெழுச்சிக்காக ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உலக தமிழர்களின் திட்டமிட்ட பொருளாதார மற்றும் அறிவுசார் பங்களிப்பு என்பவற்றில் புலம்பெயர் தமிழர்கள் தங்களது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும். அதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும் - விடுக்கப்பட்ட கோரிக்கை | Mullivaikkal Memorial Day Become A Day Tamils Take

முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு பல வரலாற்று பாடங்களை கற்பித்து சென்றுள்ளது. கால துயரத்தை மட்டும் நினைவுகூர்வதற்கான நாளாக இருக்கக்கூடாது.

அது, தமிழர் சமூகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக எதிர்காலத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை உலகத் தமிழர்கள் ஏற்கும் நாளாக மாற வேண்டும்.

அதனை தமிழர் தேசம் சர்வதேச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாற்ற வேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது உலக அரங்கில் தமிழ் மக்களின் வரலாற்று உரிமைகளை, அரசியல் அதிகாரத்தை கோரி நிற்கும் நாளாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இந்த மே 18 நினைவு நாளில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து பொதுமக்களையும் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூருவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் மீளெழுச்சி, நீதி, மனித நேயம் மற்றும் தமிழர் சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் இந்த நாளில் வலியுறுத்தி நிற்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சீனியின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் குறித்து எச்சரிக்கை

சீனியின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் குறித்து எச்சரிக்கை

போர் வெற்றியை கொண்டாடுவது அவசியமானது

போர் வெற்றியை கொண்டாடுவது அவசியமானது

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US