நீதிபதி சரவணராஜாவின் விடயத்தை விளம்பரம் செய்யாதீர்கள்: விமல் தரப்பு விசனம்

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples T saravanaraja
By Thileepan Oct 09, 2023 06:00 PM GMT
Report

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தை அரசியலாக்கி விளம்பரம் செய்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வன்னி பிரதேசத்துக்கான இணைப்பு செயலாளர் எம்.புஷ்பதேவா தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (10.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதியின் விவகாரம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதிபதி விவகாரத்தை அரசியலாக்கி விளம்பரம் தேடுகிறார்கள். நீதிபதி சரவணராஜா நீதிச் சேவைக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார்.குறித்த கடிதம் சேர வேண்டிய இடத்திற்கு சேர்வதற்கு முன்னரே சில முகநூல் போராளிகள், அரசியல்வாதிகள் அதை வைத்து அரசியலை ஆரம்பித்து விட்டார்கள்.

சர்வதேச சந்தையில் சடுதியாக அதிகரித்த எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் சடுதியாக அதிகரித்த எண்ணெய் விலை


நீதிபதி சரவணராஜா அனுப்பிய கடிதத்தில் வெறுமனே தன் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல். எனவே மன அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக எழுதியுள்ளார். அதன் விபரம், விளக்கம், எங்கும் எந்த ஊடகத்திடமும் நேரடியாக கொடுக்கப்படவில்லை. அதை வைத்து இங்கு பல கதை எழுதுகிறவர்கள் எழுதுகிறார்கள்.

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தை விளம்பரம் செய்யாதீர்கள்: விமல் தரப்பு விசனம் | Mullitivu Justice Saravanaraja Issue

இந்த விவகாரம் தொடர்பில் உண்மை கண்டறிவதற்கு என ஒரு குழு நியமிக்கப்பட்டு, விசராணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் நடவடிக்கை எடுக்கபடும் என்று நீதி சேவை ஆனைக்குழு அறிவித்தும் உள்ளது.எனினும் நீதிமன்ற மற்றும் நீதி சேவை விடயம் என்பதால் இதன் உண்மைத் தன்மை அறியாமல் நான் நிறைய விமர்சனம் செய்ய முடியாது.

கடையடைப்பு போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தை வைத்து எமது வடக்கு நீதிபதிகளையும், சட்டதரணிகளையும் குறை சொல்லும் அளவுக்கு இந்த அரசியல்வாதிகள் முற்படுவது கண்டிக்கத்தக்கது. அது ஒரு பக்கம் இருக்க, கடையடைப்பு போராட்டம் என்று எனக்கு தெரிந்த வரையில் கடந்த 30 வருடமாக செய்கிறார்கள்.

இதனால் என்ன பயன் கிடைத்தது. அரசியல் இலாபமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தலைவரும் நாங்கள் இருக்கின்றோம் என்று காட்டி கொள்வதற்கு மட்டுமே உதவியுள்ளது.

அந்த காலத்தில் விடுதலை புலிகளினால் கடையடைப்பு செய்ய கோரி “ஹர்த்தால்” என்று அறிவிக்கப்பட்டால், அக்கடைகளை பூட்ட கூடாது என்று கடைகளை உடைத்தும், மிரட்டல் விடுத்தும் திறக்குமாறு கூறிய ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் இப்பொழுது, 2009இற்கு பின் கடையடைப்பை செய்ய கோருகின்றனர் என்பது தான் வியப்பாக உள்ளது.

இதே போல், இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தும் அறிக்கை விடுவதும் இல்லை.

அந்த காலம் தொடக்கம் இந்த காலம் வரை தமிழர் விடுதலை என்கிறவர்கள் தமிழர்களை அழித்துதான் செயற்பட்டார்கள். ஹர்த்தால் என்று இப்பொழுது கடை உரிமையாளர் தொடக்கம் வேலையாட்க்கள் வரைக்கும் ஒரு விடுமுறை கிடைத்துள்ளது.

தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டி: தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை சாதனை

தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டி: தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை சாதனை

அதை கொண்டாடுவோம் என்கிற மன நிலையில் தான் கடையடைப்பை செய்கிறார்களே தவிர இங்கு உணர்வு பூர்வமாக பூட்டுவது கிடையாது. இன்றும் வடக்கில் கடையடைப்பை செய்தால் தமிழர்களுக்கு தானே நஷ்டம் ஏற்படுமே தவிர வேறு தரப்பிற்கு இல்லை.

ஆக நாட்கூலி வேலை செய்பவர்களையும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலையையும் யார் பார்ப்பது.வடக்கில் ஹர்த்தால் செய்தால் வடக்கு தானே முடங்கும். தெற்கில் என்ன ஆகும். ஆக தமிழர்களே தமிழர்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறார்கள் என்பதுவே உண்மை.

அரசியல் விமர்சனங்கள்

இந்த அரசியல்வாதிகள், போராளிகள் முடிந்தால் அங்கு ஒரு முடக்கத்தை செய்து அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் பார்ப்போம். வெறுமனே நாடாளுமன்றில் பாதுகாப்புடன் சத்தமாக பேசி, பொலிஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறது பெருமை இல்லை. உங்கள் ஆதரவாளர்களை எல்லாம் அழைத்து சென்று முடக்கம் செய்ய முடியுமா. நீங்கள் மக்களுக்காக தானே அரசியல் செய்கிறீர்கள்? சாகும் வரை போராட்டம் செய்ய போகிறோம் என்று நடத்துங்கள்.

அதே நேரம் உங்கள் ஆதரவாளர்களை மாத்திரம் அமர்த்தாமல் தலைவர்கள் அமரமுடியுமா..? மக்களும் ஏதோ என்பதுபோல் பழக்கபட்டு விட்டார்கள். அவ்வளவும் தான் இதுவரை காலமும் கடையடைப்பை செய்து என்ன பலன் கிடைத்தது என்று சொல்ல யாரும் இல்லை. அதே போல் தான் இம்முறையும். இதேவேளை, ஊடகவியளாருக்கு ஒரு அன்பான வேண்டுகோள், மறைமுகமாக ஆதரவு கொடுக்காதீர்கள்.

அதாவது சில வியாபார ஸ்தலங்கள் திறந்திருந்தால் குறித்த தளத்தை புகைப்படம் எடுத்து நீங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதால் சில போலி முக நூல் விமர்சகர்களும், சில செயற்பட்டார்களும் தகாத வார்த்தையால் விமர்சனம் செய்வார்கள். அதனால் பல அவமானங்களை சந்தித்து அவர்களும் தமது வியாபார ஸ்தலங்கள் பூட்டுகிறார்கள். எனவே அன்பான ஊடக நண்பர்களே இவ்வாறான செயல்களை தவிர்ப்பதும் நல்லது என நினைக்கின்றேன்.

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தை விளம்பரம் செய்யாதீர்கள்: விமல் தரப்பு விசனம் | Mullitivu Justice Saravanaraja Issue

மேலும், போலி தேசியம் பேசும் அரசியல்வாதிகளே முடிந்தால் கடையடைப்பை செய்யுங்கள். இல்லை மக்களுக்காக விடுதலை என்று காலத்துக்கு காலம் நிலைமாறி பேசுகிறதை விடுத்து உண்ணாவிரதம் இருங்கள். அது முடியுமா..? அதை செய்யமாட்டீர்கள். ஆக ஏமாறும் மக்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றி கொண்டே தான் இருக்க போகிறீர்கள்.

இந்த நிலை நீண்ட நாட்களுக்கு இல்லை. உங்கள் போன்ற போலி பேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவே பகிரங்கமாக ஊடக சந்திப்பை செய்கிறேன். இதேபோல், உள்ள ஏனைய அரசியல்வாதிகள், முக்கியமாக அரச தரப்பு அரசியல்வாதிகள், தேசியகட்சி சார்ந்தவர்கள், நீங்களும் முக நூலில் விளம்பரத்தை மட்டும் தேடமால் மக்களுக்கு உண்மையை சொல்லி விளங்கபடுத்துங்கள். உண்மையை சொன்னால் எதிர்ப்பு வரும் என்று அஞ்சி ஓடி மறையாதீர்கள்.

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தை விளம்பரம் செய்யாதீர்கள்: விமல் தரப்பு விசனம் | Mullitivu Justice Saravanaraja Issue

அதே போல் உண்மையை அறிந்தால் ஆதரவு தரக்கூடிய மக்களும் இருப்பார்கள். ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜனபெரமுன என்பவற்றைச் சேர்ந்த பிரமுகர்கள் எல்லோரும் சத்தம் இல்லாமல் இருக்கிறது ஏன். உண்மை சொல்ல பயமா..? நீங்களும் மக்களுக்காக இல்லையா. உங்க அரசியலுக்காக மாத்திரமா உள்ளீர்கள்.

உண்மையில் போலி தேசியம் பேசி மக்களை வழிப்படுத்தும் கூட்டத்தினர் காலத்திற்கு காலம் ஒவ்வொரு விடயத்தை முன் நிறுத்தி மக்களை குழப்பிவிட்டு தங்கள் அரசியலை செய்கிறார்கள். உதாரணமாக முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முன் ஆசாத் மெளலான பிரச்சினை. அது முடிய முன் இப்பொழுது முல்லைத்தீவு நீதிபதி பிரச்சனை. இப்படியே இவர்கள் எங்கள் மக்களை ஏமாற்றி தமது அரசியலை செய்து கொண்டே போகிறார்கள்.

எனவே மக்கள் இனியும் இவர்களை நம்பாமல் இவர்களின் போலி முகத்திரைகளை கிழிக்க முன்வரவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் உக்கிர போரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பெண்

இஸ்ரேல் உக்கிர போரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பெண்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் உள்நுழையும் அமெரிக்கா: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் உள்நுழையும் அமெரிக்கா: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US