முள்ளிப்பொத்தானை சூரங்கல் வரையான வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு
தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை- சூரங்கல் வரையான வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று முன்தினம்(16) கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் இடம் பெற்றது.
வீதி புனரமைப்பு
சுமார் 285 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த முள்ளிப்பொத்தானை _ சூரங்கல் வீதியானது 1010 மீட்டர் தூரத்தை கொண்ட வீதி அபிவிருத்தியாக ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ,திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட பிரதம பொறியாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
