நீச்சல் துறையில் திறமையான வீரராக முல்லைத்தீவு இளைஞன் தெரிவு
வடமாகாண லைப் காட் சர்வதேச தர நீச்சல் பயிற்சிக்கான தெரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரை பிரதேசத்தைச் சேர்ந்த இராதகிருஷ்ணன் லஜிதன் அதிதிறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ். காரைநகரில் நடைபெற்ற நீர்நிலைகள் பிறர் உயிர்காப்பு (Life Guard) 21 நாள் 2ம் கட்ட பயிற்சிக்காக நடைபெற்ற புதிய அணி தெரிவில் மாகாண ஏனைய வீரர்களுடன் பங்குகொண்ட இவர் குறித்த பயிற்சிக்காக நடந்த நீச்சல் தெரிவில் 200 மீற்றர் தூரத்தை 8 நிமிடத்திற்குள் நீந்துதல் என்ற இலக்கில் 4.40 என்ற குறைந்த நேரத்தில் நீந்திக் கடந்துள்ளார்.
இதனூடாக குறித்த தேர்வில் மிகக்குறைந்த நேரத்தில் முதலாமவராக நீந்தியவராக எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் மாகாண நீச்சல் துறையில் திறமையான வீரராக இனம் காணப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri